தான் என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள் கொண்டுவர முடிந்தால் பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச் செல்கிறார். பாபாவிடம் முழுமையாக சரணடைந்தவர்கள். பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
பூஜைகள் புனஸ்காரங்கள், சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே.
இருப்பினும், உள் மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்த போதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது... ஓம் ஸ்ரீ சாய் ராம்...♥