கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 1, 2019
வாதத்தை சரியாக்கும் எண்ணெய் (இரகசிய முறை):
1) எண்ணெய்கள்:
நல்லெண்ணெய் - 100 மிலி
வேப்ப எண்ணெய் - 100 மிலி
விளக்கெண்ணெய் - 100 மிலி
2) புளித்த காடி நீர்
அதாவது புளித்த (பழைய சோற்று நீர்)
3) கடை சரக்குகள்:
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
வகைக்கு 1 பலம்
4) நாட்டுப் பசும்பால்
செய்முறை:
எல்லா சரக்குகளையும் ஒன்றாக சூரணித்து கலந்து வைக்கவும்.
இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சட்டியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும்.
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்.
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.
இந்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்.
அளவு & அனுபானம:
உள் மருந்தாக:
100 மிலி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும் போது அந்தப் பாலுடன் அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்.
வெளி மருந்தாக:_*
இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறுநாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர 84 வகை வாதங்களும், அனைத்து சூலை நோய்களும்,
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.
*தீரும் நோய்கள்:*
நடுக்கு வாதம், முடக்கு வாதம், கீல்வாதம், நரித்தலை வாதம், ஆமை வாதம், பக்கவாதம், கைகால் வீக்கம், வலி போன்ற அனைத்து வாத நோய்களும், அனைத்து சூலை நோய்களும் குணமாகும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...