கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, July 2, 2019
மூல நோயைக் குணப்படுத்தும் ஆகாயத்தாமரை!
ஆகாயத்தாமரை என்ற அழகான இந்த மூலிகைக்கு அந்தரத்தாமரை, வெங்காயத்தாமரை, குளிர்த்தாமரை, குழித்தாமரை, ஆகாயமூலி போன்ற பெயர்களும் உண்டு. இந்தத் தாவரத்தின் தண்டுகளில் காற்று நிரப்பப்பட்டிருப்பதால், இது நீரில் மிதந்தபடியே வாழ்கிறது. ஊதா நிறப் பூக்களைக்கொண்ட இது, நீரில் கூட்டம்கூட்டமாக வளரும் சிறு செடி வகை.
ஆகாயத்தாமரையின் இலையை அரைத்து கரப்பான் எனும் சரும
நோய், தொழுநோய்ப் புண்களின்மீது வைத்துக் கட்டினால் விரைவில் குணமாகும். பத்து ஆகாயத்தாமரை இலைகளை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அதன் ஆவியை ஆசனவாயில் பிடித்துவர, மூல முளை மறைந்து விடும்.
வெண்ணெய் அல்லது பசு நெய் அரை டேபிள்ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆகாயத்தாமரை இலைப்பசையைச் சேர்த்துப் பச்சை வாசனை போகுமளவு கொதிக்க வைக்கவும். அதன்பிறகு அதை வடிகட்டிக் குடித்து வந்தால் கழிச்சல், ரத்த மூலம், சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்.
ஆகாயத்தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து சிறு தீயில் மெழுகுப் பதமாகும்வரை பதமாகக் காய்ச்ச வேண்டும். அதனுடன் கிச்சிலிக்கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி – தலா பத்து கிராம் எடுத்து இடித்துப்போட்டு மீண்டும் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவந்தால் உடல் சூடு, கண் எரிச்சல் மற்றும் மூல நோய் போன்றவை குணமாகும்.
இதன் இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மி.லி அளவு எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயச்சாறு பிழிந்து இரண்டு வேளை குடித்துவந்தால் சொட்டு மூத்திரம், நீர்க்கடுப்பு போன்றவை கட்டுப்படும்.
100 மி.லி இலைச்சாறுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து இளஞ்சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் துணியில் தொட்டு வெளிமூலம், மூல எரிச்சல், வலி போன்றவற்றுக்கு ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஆகாயத்தாமரையின் நார் போன்ற வேர்கள் தண்ணீரில் கலந்துள்ள உலோக வடிவிலான நச்சுப்பொருள்களை எளிதாக உறிஞ்சி, தனக்குள் சேமித்து வைக்கக்கூடியது. இதன் காரணமாக நீர் மாசுபடாமல் காக்கிறது. மாசு நிறைந்த நீரில் உள்ள ஆகாயத்தாமரையில் ஈயம், ஆர்சனிக் போன்ற நச்சுத்தன்மைகளை நீக்க அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...